பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலையில் போதைப் பொருள்கள் சம்பந்தப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் (என்.சி.பி) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதில், நடிகையும், சுஷாந்தின் தோழியுமான ரியா சக்கரபோர்த்தி, அவரது சகோதரை போதைப்பொருள் பயன்படுத்தியதாக கூறி கைது செய்து, என்.சி.பி. அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து தீபிகா படுகோனே, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இதனால் பாலிவுட் வட்டரமே கலக்கத்தில் ஆழ்ந்தது.