விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் 'நானும் ரெளடிதான்' என்ற திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து சூர்யாவை வைத்து 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், விக்னேஷ் சிவன் மீண்டும் 'நானும் ரெளடிதான்' பட கூட்டணியான விஜய் சேதுபதி, நயன்தாராவை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' என்னும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லலித்குமார், விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 90 விழுக்காடு முடிவடைந்துவிட்டது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் இருக்கின்றனர். 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் முதல் பாடலான 'ரெண்டு காதல்' காதலர் தினமான பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது.
தற்போது இரண்டாவது பாடலான "டூ...டூ...டூ" சமீபத்தில் வெளியானது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப் தங்களது சமூகவலைதளப் பக்கங்களில், "டூ...டூ...டூ" பாடல் மிகவும் பிடித்துள்ளதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: சமந்தாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படக்குழு