பாலிவுட்டில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடன இயக்குநராகவும் வலம் வருவர் ஃபரா கான். 12 வயது நிரம்பிய இவரது மகள் அன்யா கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி திரட்டியுள்ளார்.
கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டிய பிரபல பெண் இயக்குநரின் மகள் - Farah khan daughter collected for corona fund
பாலிவுட் தயாரிப்பாளர் ஃபரா கான் மகள் கரோனா தடுப்பு நடவடிக்கை நிதியாக ஐந்து நாட்களில் ரூ. 70 ஆயிரம் திரட்டியுள்ளார்.
![கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு நிதி திரட்டிய பிரபல பெண் இயக்குநரின் மகள் Farah khan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6772981-1078-6772981-1586772063078.jpg)
Farah khan
இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ஃபராகான், என் 12 வயது மகள் அன்யா ஐந்து நாள்களில் 70 ஆயிரம் ரூபாயை கரோனா தடுப்பு நிதியாக திரட்டியுள்ளார். செல்லப்பிராணிகளை ரூபாய் ஆயிரத்திற்கு ஓவியமாக வரைந்து தருகிறார். இந்த பணம் தேவையுள்ளவர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்யாவின் ஒவியத்தை வாங்கியவர்களுக்கும் நன்கொடை அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றி என ட்வீட் செய்துள்ளார்.