தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு நீதி கேட்கும் பாலிவுட் பிரபலங்கள்!

தூத்துக்குடி ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிராக பாலிவுட் திரைப் பிரபலங்களான பிரியங்கா சோப்ரா, டாப்ஸி பன்னு உள்ளிட்டோர் ட்விட்டரில் குரல் எழுப்பியுள்ளனர்.

celebrities seek justice for jayaraj and fenix
celebrities seek justice for jayaraj and fenix

By

Published : Jun 27, 2020, 4:58 PM IST

தூத்துக்குடியில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்களலும் இச்சம்பவம் பெரும் பேச்சுபொருளானது. இந்நிலையில், பாலிவுட் திரைப் பிரபலங்கள் பலரும் இக்கொடூர சம்பவத்துக்கு தங்களை எதிர்ப்பை பதிவுசெய்திருக்கின்றனர்.

பிரியங்கா சோப்ரா

நடிகை பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. என்ன குற்றம் செய்திருந்தாலும் எந்த மனிதனுக்கும் இந்தக் கொடுமை நடக்கக்கூடாது. குற்றவாளி தண்டிக்கப்படாமல் இருக்கக்கூடாது. நமக்கு உண்மைகள்தான் தேவை.

அவர்களின் குடும்பம் எப்படி உணர்கிறார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க நமது குரல்களைப் பலப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

நடிகை டாப்ஸி பன்னு ட்விட்டரில், ”இதுபோன்ற பல வழக்குகளில் இந்தச் சம்பவமும் ஒன்று. ஆனால் இந்தப் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்க ஒரு வழக்கு ஆரம்பப் புள்ளியாக இருக்கும். ஜெயராஜ், பென்னிக்ஸ் நமக்குத் தெரிந்த யாராகவோ இருக்கலாம். இச்சம்பவத்தில் கிடைத்த விவரங்கள் அச்சுறுத்தலாகவும், மிகவும் அதிர்ச்சியாகவும் இருக்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ரித்தேஷ் தேஷ்முக், ”இது முற்றிலும் சோகமான, தேசத்துக்கே வெட்கக்கேடான ஒரு விஷயம். இதுகுறித்து வாசிக்கும்போதே என் உடம்பெல்லாம் நடுங்குகிறது. இந்த மிருகத்தனத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றாகக் குரல் கொடுக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

நடிகை ஜெனிலியா, ”நாம் எவ்வளவு மோசமான இனமாக மாறிவருகிறோம் என்பதை நினைக்கையில் மிகவும் அதிரச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாகிறேன். இச்சம்பவம் மிகவும் கொடூரமானது. என் இதயத்தை உடைக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகை காஜல் அகர்வால், ”இது அச்சுறுத்தலான, சகிக்கமுடியாத ஒன்று. நமது மூளை எப்படி இவ்வளவு நோய்வாய்ப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போது இதற்காக நாம் குரல் எழுப்ப வேண்டும். ஜெயராஜ், பென்னிக்ஸுக்கு ஆதரவாக நிற்கிறேன். அவர்களது குடும்பத்தின் வேதனையைக் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு எனது மனமார்ந்த வருத்தமும், இரங்கலும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க... 'காவல் துறை கொலைசெய்தால் யாரை அழைப்பது?' - நீதி கேட்கும் யுவன்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details