பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் 2018ஆம் ஆண்டு முதல் புற்று நோயுடன் போராடிவந்தார். அதற்கான சிகிச்சையையும் அவர் தொடர்ந்து மேற்கொண்டு வந்தார். இருப்பினும் செவ்வாய் கிழமை (ஏப்.28) அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்ததால் அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இர்ஃபான் கான் இன்று (ஏப்.29) உயிரழந்தார்.
இதுகுறித்து இர்ஃபான் கானின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "2018 ஆம் ஆண்டு நியூரோ எண்டோகிரைன் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது குறித்து அறிந்த இர்ஃபான் இதை எதிர்த்து போராடி வெல்வேன் என்று தனது மனதில் நம்பிக்கையுடன் எழுதிவைத்தார். திரையில் தனது கண்களால் முக்கிய காட்சிகளின் உணர்வுகளை கடத்தும் நபராக இர்ஃபான் இருந்துள்ளார். இந்த நாளில் அவர் உயிரிழந்த செய்தி நம்மை மிகவும் வருத்தமடைய செய்துள்ளது.