ஹாலிவுட் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரை போன்று பாடல் பாடும் விவசாயியை அறிமுகப்படுத்தியுள்ளார் பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் ஹேர்
வாட்ஸ்-ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் உதவியால் இந்தியாவின் எந்த கடைகோடி பகுதிகளில் வாழ்ந்து வரும் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் நிகழ்வு சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் விவசாயி கம் பாப் பாடகரை அறிமுகப்படுத்தியுள்ளார் பாலிவுட் மூத்த நடிகர் அனுபம் ஹேர்.
தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ள அவர், அதில், கர்நாடகாவை சேர்ந்த இந்த விவசாயிக்கு ஆங்கிலம் சரளமாக பேசத் தெரியாது என்று உறுதியாக தெரிகிறது. ஆனால் அவர் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரை பாடும் முறையும், மனநிலையும் ஆர்வத்தோடு புதிய விஷயத்தை கற்றுக்கொண்டு அதை அனுபவபூர்வமாக வெளிகாட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமா, அரசியல், சமகால நிகழ்வுகள் என சகல விஷயங்களையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் அனுபம் ஹேர், தற்போது இந்தியாவின் ஜஸ்டின் பீபரை அடையாளப்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே, ரயில்களில் பாடி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரானு மரியா மோன்டல், தமிழ்நாட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளியான திருமூர்த்தி உள்ளிட்டோர் சமூக வலைத்தளங்களின் மூலமாக சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தனர்.
இதில், திருமூர்த்தியை சீறு படம் மூலம் பாடகராக்கியுள்ளார் இசையமைப்பாளர் டி. இமான். இதே போல் ரானு மரியா மோன்டலும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாடி வருகிறார். ஏராளமான இசை குழுக்களும் அவரை பாடல் பாட வைக்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: வாக்கைக் காப்பாற்றிய டி.இமான் - வைரலான பாடகருக்கு 'சீறு'படத்தில் வாய்ப்பு!
இந்த வரிசையில் அச்சு அசலாக ஜஸ்டின் பீபரை போன்று பாடும் இந்த கார்நாடக விவசாயின் விடியோவும் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், விரைவில் இவரது திறமையை அங்கீகரிக்கும் வாய்ப்பும் விரைவில் அமையும் எனத் தெரிகிறது.