மும்பை:ரஜினியின் 'தர்பார்' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பாலிவுட் பிரபலம் சுனில் ஷெட்டி. இவர்,தெற்கு மும்பையின் அல்தமவுண்ட் சாலையில் உள்ள பிருத்வி அடுக்குமாடி குடியிருப்பில் 18ஆவது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
இந்த குடியிருப்பு பகுதியில் 30 மாடிகளில் 120 வீடுகள் உள்ளன. கடந்த சில நாள்களாக இந்தக் குடியிருப்பில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மும்பை மாநகராட்சியின் கோவிட் -19 தடுப்பு விதிகளின் படி, ஒரு குறிப்பிட்ட கட்டிடத்தில் ஐந்துக்கும் அதிகமான நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பாதுகாப்பு கருதி அந்த கட்டிடத்திற்கு சீல் வைக்க வேண்டும். இந்த விதிப்படி தற்போது சுனில் ஷெட்டி வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு மாநகராட்சியினர் சீல் வைத்துள்ளனர்.