தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் அஜித் பட இயக்குநரின் புதிய படம்! - ஷெர்ஷா திரைப்படம்

விஷ்ணுவர்தன் இந்தியில் இயக்கிய 'ஷேர்ஷா' திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

Shershaa
Shershaa

By

Published : Jul 19, 2021, 1:52 PM IST

தமிழில் 'அறிந்தும் அறியாமலும்', 'பட்டியல்', 'பில்லா', 'ஆரம்பம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் 'ஷேர்ஷா'.

கார்கில் போரையும், போரில் நாட்டுக்காக உயிர்நீத்து வீர மரணமடைந்த இளம் வீரர் கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை வரலாற்றையும் மையமாக வைத்து உருவாகியுள்ள 'ஷேர்ஷா' படத்தில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா, விக்ரம் பத்ரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். மேலும் ஜாவெத் ஜெஃப்ரி, ஹிமான்ஷு மல்ஹோத்ரா, பரேஷ் ராவல் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பாலிவுட்டின் முன்னணி இயக்குநர் கரண் ஜோஹர் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் லடாக், காஷ்மீர், சண்டிகர் உள்ளிட்ட இடங்களில் தொடங்கி முன்னதாக நடைபெற்று வந்தது. தற்போது கரோனா பரவல் காரணமாக இப்படம் நேரடியாக அமேசான் பிரைமில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகிறது.

தனது 24ஆம் வயதில் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வீர தீர செயல்களைப் பாராட்டி அவரது மறைவுக்குப் பிறகு இந்திய அரசு பரம் வீர் சக்ரா விருது வழங்கி அவரை கெளரவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலிவுட்டில் கால்பதித்த 'பில்லா' பட இயக்குநர்

ABOUT THE AUTHOR

...view details