தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அச்சச்சோ... யாஷிகாவைத் தொடர்ந்து விபத்தில் சிக்கிய பிக்பாஸ் போட்டியாளர் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

யாஷிகாவைத் தொடர்ந்து இந்தி பிக்பாஸில் (BiggBoss 11) கலந்துகொண்ட ஆர்ஷி கான் (Bigg Boss fame Arshi Khan) விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

ஆர்ஷி கான்
ஆர்ஷி கான்

By

Published : Nov 24, 2021, 9:23 AM IST

தொலைக்காட்சி தொடர்களில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ், மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடா ஆகிய மொழிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகிவருகிறது.

இந்நிலையில் இந்தியில் பிக்பாஸ் 11ஆவது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானவர் நடிகை ஆர்ஷி கான் Bigg Boss fame Arshi Khan). இவர் கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 22) மும்பையிலிருந்து, டெல்லி நோக்கிப் படப்பிடிப்பு முடித்துவிட்டுச் சென்றுகொண்டிருந்தார்.

ஆர்ஷி கான்

அப்போது மால்வியா நகர் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திடீரென இவரது கார் சாலை நடுவே உள்ள டிவைடரில் இடித்து விபத்துகளானது (Road accident). இந்த விபத்தில் அர்ஷி கான், அவரது உதவியாளருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன.

இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார். இவ்விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படாத காரணத்தினால் காவல் துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.

முன்னதாக இதேபோன்று கோலிவுட் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் சிக்கி, தற்போது சிகிச்சைப் பெற்றுவருகிறார். இதில் அவரது தோழி பாவனி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:95 நாள் போராட்டம் - குழந்தைபோல் நடந்து பழகும் யாஷிகா

ABOUT THE AUTHOR

...view details