அமிதாப் பச்சன், ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் ஷூஜித் சர்கார் இயக்கத்தில் இந்தியில் வெளியாகியிருக்கும் திரைப்படம் குலாபோ சீதாபோ. ஏப்ரல் 17ஆம் தேதி தியேட்டரில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட திரைப்படம், கரோனா வைரஸ் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படாததால் ஓடிடி தளமான அமேசான் பிரைமில் நேற்று வெளியானது.
அமிதாப் பச்சனின் குலாபோ சீதாபோ கதாபாத்திரம் உண்மையா? - ஆயுஷ்மான் குர்ரானா
குலாபோ சிதாபோ படத்தில் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் போல தோற்றமளிக்கும் ஒரு வயதான மனிதரின் படம் சமூகவலைதளத்தில் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
big-bs-character-in-gulabo-sitabo-inspired-by-portrait-or-real-life
இதில் வயதான கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் தோன்றி நடித்துள்ளார். பலரும் இவரது நடிப்பைப் பார்த்து பாராட்டி வரும் சூழலில், அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் போலவே தோற்றமளிக்கும் ஒரு மனிதரின் புகைப்படம் சமூகவலைதளங்கில் உலா வருகிறது.
இதனால் அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் உண்மைக் கதாபாத்திரத்தை தழுவி எடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.