தமிழ்நாடு

tamil nadu

பிபிஇ கிட்டுடன் மீண்டும் தொடங்கிய 'கேபிசி  12' - 'பிக் பி'யின் புதிய அப்டேட்

By

Published : Aug 24, 2020, 1:09 PM IST

டெல்லி: கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்ட அமிதாப் பச்சன் 'கோன் பனேகா க்ரோபதி' நிகழ்ச்சி படப்பிடிப்பில் மீண்டும் கலந்துகொண்டார்.

கோன் பனேகா க்ரோபதி
கோன் பனேகா க்ரோபதி

பாலிவுட்டில் அதிக மக்களால் பார்க்கப்படும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி 'கோன் பனேகா க்ரோபதி'. அதற்கு முக்கியக் காரணம் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பாலிவுட் மாபெரும் நட்சத்திரமான அமிதாப்பச்சன்தான்.

2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 11 சீசன் முடிந்து தற்போது 12ஆவது சீசனுக்கு தயாராகிவருகிறது. தற்போது நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டிருந்தன. மேலும் அமிதாப் பச்சனும் கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

தற்போது இதிலிருந்து மீண்டுவந்து அமிதாப்பச்சன் கேபிசி நிகழ்ச்சிப் படப்பிடிப்புக்கு மீண்டும் தயாராகியுள்ளார். படப்பிடிப்புக் குழுவினர் பிபிஇ கிட்டுடன் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த நிகழ்ச்சியை உருவாக்கிவருகின்றனர்.

இது குறித்து அமிதாப் பச்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மீண்டும் வேலைக்கு கடல் நீல பிபிஇ கிட். கேபிசி 12. 2000ஆம் ஆண்டு தொடங்கியது. இன்று 2020ஆம் ஆண்டு. 20 ஆண்டுகள் ஆச்சரியம். இது ஒரு வாழ்நாள் சாதனை" என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமிதாப் பச்சன், "கேபிசி 12 நிகழ்ச்சி, புரோமோ படப்பிடிப்புக்காக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

வாழ்க்கை எப்போதும் ஒரேபோன்று இருப்பதில்லை. இந்தத் தொற்று காலத்தில் நாம் நம்மை எப்படி வழிநடத்திக் கொள்கிறோம் என்பதே முக்கியம்" எனப் பதிவிட்டிருந்தார்.

ABOUT THE AUTHOR

...view details