அமிதாப் பச்சன் நடித்துள்ள புதிய படமான ஜுந்த் படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் புராமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமிதாப் படம் குறித்து பல்வேறு விஷயங்களைப் பேசினார்.
இதையடுத்து கவிஞரும், தனது தந்தையுமான ஹரிவன்ஸ் ராய் பச்சன் முதல் புத்தகத்தை எழுதி வெளியிட்ட பிறகு சந்தித்த விமர்சனங்கள் குறித்த ட்விட்டரில் நினைவுகூர்ந்துள்ளார் அமிதாப்.
இதுதொடர்பாக அவர் இந்தி மொழியில் பதிவிட்டிருப்பதாவது:
ஒரு நாள் சரஸ்வதி கடவுளே உனது தந்தை பற்றி தனது வாயால் பேசுவார் என்று எனது பாட்டி அடிக்கடி கூறியிருக்கிறார்.
எனது முதல் புத்தகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மிகைப்படுத்தல் என்றே சொல்லலாம். ஒரு கவிஞன் ஊக்குவிக்கப்படவேண்டும். உண்மைக்கு ஊக்கம் தேவை என்று புத்தக வெளியீட்டின்போது எனது தந்தை தெரிவித்ததாக நினைவுகூர்ந்துள்ளார்.
தந்தை ஹரிவன்ஸ் ராய் பச்சன் குறித்து இப்படியொரு திடீர் பதிவின் மூலம் தனது தன்னம்பிக்கையை வளர்தெடுக்க அமிதாப் முயற்சித்திருக்கிறார் என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மராத்தி சினிமா முன்னணி இயக்குநர் நாகராஜ் மஞ்சுலே இயக்கியிருக்கும் ஜுந்த், சேரி கால்பந்து என்ற விளையாட்டு அமைப்பை தோற்றுவித்த விஜய் பர்சே வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் பிரதான கேரக்டரில் அமிதாப் நடித்துள்ளார்.