தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை உருவாக்குங்கள் - 'பிக் பி' அமிதாப் பச்சன் - அமிதாப்பச்சனின் படங்கள்

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்கு மகிழ்ச்சியானதை உற்சாகமுடன் செய்யுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

By

Published : Oct 31, 2020, 3:30 PM IST

பாலிவுட் ‘பிக் பி’ அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் மிகவும் சுறுசுறுப்பான பிரபலங்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தனது எண்ணங்கள், கருத்துக்களை ட்விட்டர் வாயிலாக பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், " ஒவ்வொரு நாள் காலையிலும் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய ஒரே நபர் நீங்கள்தான். இளமையாக இருக்கும்போது, ​​நீங்கள் உலகம் முழுவதையும் மகிழ்விக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

அது அப்படி இல்லை. உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதைச் செய்யுங்கள், நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையை உருவாக்குங்கள்.

அவ்வாறு நீங்கள் செய்தால் உண்மையில் நேசிக்கிற ஒருவரை தினமும் காலையில் உங்களால் பார்க்க முடியும் என்று பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details