பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினரான அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஆராத்யா ஆகிய நான்கு பேரும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர். இந்நிலையில், ஐஸ்வர்யா ராயும், அவரது மகள் ஆராத்யாவும் கரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த பாலிவுட் 'பிக் பி'
மும்பை: நடிகர் அமிதாப் பச்சன் தனது பேத்தியும் மருமகளும் கரோனா தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியதற்கு இறைவனுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.
இதற்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்திருக்கும் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "எனது பேத்தியும் மருமகளும் இந்த தொற்று நோயிலிருந்து மீண்டு வீட்டிற்கு திரும்பும் செய்தி கேட்கும்போது என் கண்களில் இருந்து வரும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. இறைவா உன் கருணையே கருணை" என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், "உங்களது தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி. ஐஸ்வர்யாவுக்கும், ஆராத்யாவுக்கும் கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளது. அவர்கள் இப்போது வீட்டில் இருப்பார்கள். நானும் எனது தந்தையும் மருத்துவ ஊழியர்களின் பராமரிப்பில் மருத்துவமனையில் இருக்கிறோம்" என்று குறிப்பிட்டிருந்தார்.