தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பெண்களுக்காக மேடையேறிய ஐஸ்வர்யா ராய் மகள்!

பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகை ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா பச்சன் பெண்ணுரிமை பற்றி உரையாற்றியுள்ளார்.

Aishwarya Rai
Aishwarya Rai

By

Published : Dec 21, 2019, 12:58 PM IST

Updated : Dec 21, 2019, 1:10 PM IST

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் - நடிகை ஐஸ்வர்யா ராய் தம்பதியின் மகள் ஆராத்யா பச்சன், திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியில் கல்வி பயின்றுவருகிறார். இதே பள்ளியில் பாலிவுட் பிரபலங்களில் குழந்தைகள் பலரும் பயின்றுவருகின்றனர்.

இந்த நிலையில், அம்பானி சர்வதேச பள்ளியின் ஆண்டு விழா கடந்த வியாழக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளில் தங்களது திறமையை வெளிப்படுத்தினர். இவ்விழாவில் பங்கேற்ற ஆராத்யா பச்சன் பாரம்பரிய புடவை அணிந்து வந்து விழாவில் பங்கேற்றவர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் - ஆராத்யா பச்சன்

விழா மேடையேறிய ஆராத்யா, பெண்கள், பெண்ணுரிமை உள்ளிட்ட தலைப்பில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், ’நான் ஒரு புதிய யுகத்தின் கனவு. இந்தப் புதிய உலகில் நாம் விழித்திருப்போம். பாதுகாப்பாக இருக்கும் அவ்வுலகில் நான் நேசிக்கப்படுவேன். நான் மதிக்கப்படுவேன்.

வாழ்க்கை எனும் புத்தகத்திலிருந்து ஞானத்தைப் பெறும் நாம் அதிலிருந்து மனிதாபிமானத்தை கொண்டிருப்போம்” என்று பெண்கள் தொடர்பாகப் பேசியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டுவருகிறது.

இந்த விழாவில், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், பிரிந்தா ராய், ஸ்வேதா நந்தா மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பலரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அமிதாப் பச்சன், ”குடும்பத்தின் பெருமை. ஒரு பெண்ணின் பெருமை. எல்லா பெண்களின் பெருமை. எங்கள் அன்பான ஆராத்யா!” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க...

ரஜினிக்கு தங்கையாகிறாரா கீர்த்தி சுரேஷ்?

Last Updated : Dec 21, 2019, 1:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details