பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது வலைப்பதிவின் 12ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடி தனது ரசிகர்களுக்கும், வலைப்பதிவை பின்தொடருபவர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
77 வயதான அந்த நடிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்கள், தனது அனிமோஜியையும் (அனிமேட்டட் எமோஜி) பகிர்ந்தார். அவர் தனிப்பட்ட வலைப்பதிவு (personal blog) தொடங்கி 4,424 நாள்கள் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.
தனது ட்விட்டர் பதிவில் '17 ஏப்ரல் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வலைப்பதிவு 12 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. 4,424 அதாவது நான்காயிரத்து நானூற்று இருபத்து நான்கு நாள்களாக நான் தினந்தோறும் இடைவிடாமல் எழுதிக்கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி' எனத் தெரிவித்தார்.
அந்தப் பதிவை ஒரு மணி நேரத்திற்குள் இரண்டு லட்சம் பேர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க... இந்தாண்டுல வைரஸ் இருக்கு....புதிய ஆண்டு கிடைக்குமா...'பிக் பி'யின் ஆதங்க ட்வீட்