அமிதாப் பச்சனின் வீட்டிற்கு கிருமிநாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள் - ஐஸ்வர்யாராய்க்கு கரோனா
மும்பை: அமிதாப் பச்சன் குடும்பத்தினருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் வசித்துவந்த வீட்டை மும்பை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தினர்.
![அமிதாப் பச்சனின் வீட்டிற்கு கிருமிநாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:41:51:1594548711-adasdasd-1207newsroom-1594528212-1000.jpg)
நடிகர் அமிதாப் பச்சனும், அவரது மகன் அபிஷேக் பச்சனும் தங்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக தங்களது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தனர்.
இச்செய்தி சமூக வலைதளத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. முதற்கட்ட சோதனை முடிவுகளில் ஐஸ்வர்யா ராய்க்கு கரோனா தொற்று இல்லை என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்ட சோதனையில் ஐஸ்வர்யாவுக்கும் ஆரத்யாவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி ரசிகர்களிடையேயும், திரைப் பிரபலங்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வசித்துவந்த மும்பை ஜுஹு பகுதியில் இருக்கும் அவரது வீட்டிற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணியில் மும்பை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.