தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திருமணம் செய்யக் கோரிக்கை விடுத்த ரசிகர்! குறும்பாய் பதிலளித்த பூமி பெட்னேக்கர்! - பாலிவுட் செய்திகள்

தன் பதி, பத்னி ஔர் ஹோ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் பிஸியாக இருக்கும் பிரபல பாலிவுட் நடிகை பூமி பெட்னேக்கர், தன் ரசிகரின் திருமணக் கோரிக்கைக்கு ட்விட்டரில் தவிர்க்காமல் பதிலளித்தது நெட்டிசன்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Bhumi Pednekar
Bhumi Pednekar

By

Published : Nov 29, 2019, 11:29 PM IST

பாலிவுட் உலகில் தன் தனித்துவமான கதாப்பாத்திரத்தேர்வுகளாலும், நடிப்புத்திறமையாலும் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகை பூமி பெட்னேக்கர். விரைவில் வெளிவரவிருக்கும் தன் பதி, பத்னி ஔர் ஹோ திரைப்படத்தின் விளம்பரப் பணிகளில் தற்போது படக்குழுவுடன் இணைந்து பிஸியாகவுள்ள அவர், தன் ரசிகர் ஒருவரின் திருமணக் கோரிக்கைக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள விதம் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Bhumi Pednekar

பூமியின் தீவிர ரசிகரான அவர், ”அழகிய பூமி பெட்னேக்கருக்கு வணக்கம், உங்களின் புகைப்படத்தை ரசிக்காமல் என் ஒருநாளைக்கூட கடந்ததில்லை. நீங்கள் ஒரு திரையுலக நட்சத்திரமாக அல்லாமல் சாதாரண பெண்ணாக இருந்திருக்கலாம். இவ்வளவு காதலிருந்தும் உங்களைத் திருமணம் செய்யமுடியாத சாதாரண மனிதனாக இருப்பதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்” என மனமுருகி, தன் காதலை வெளிப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரசிகரின் இந்தக் காதல் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, அவரது பதிவைப் பகிர்ந்து, ”தான் திரை நட்சத்திரமாக இருந்தாலுமோ, அப்படி இல்லாமல் இருந்திருந்தாலுமோ தற்போது திருமணத்திற்கு வாய்ப்பில்லை. ஆனால் என்னை இழந்ததாக உங்களை வேதனைப்படவிடமாட்டேன். திரையில் அடிக்கடி தோன்றி உங்களை மகிழ்விப்பேன்” எனக்கூறி அவரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பதிலளித்துள்ளார்.

தனது ரசிகரின் திருமணக் கோரிக்கையை மதித்து அவருக்கு பதிலலித்துள்ள பூமி பெட்னேக்கரின் இந்த பதிலை, அவரது ரசிகர்கள் சிலாகித்து ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர். தவிர, நடிகர் கார்த்திக் ஆர்யனுடன், பூமி பெட்னேக்கர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் பதி, பத்னி ஔர் ஹோ திரைப்படம் 1978ஆம் ஆண்டு இதேப் பெயரில் வெளிவந்த பாலிவுட் திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

அமெரிக்காவுக்கு முன்பே இந்தியாவில் ரிலீஸ், ப்ளாக் விடோ அதிரடி!

ABOUT THE AUTHOR

...view details