இந்தியாவில் தற்போது கரோனா வைரசின் (தீநுண்மி) இரண்டாவது அலை வேகமாகப் பரவிவருகிறது. கடந்த சில மாதங்களாகக் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில், கடந்த சில நாள்களாகத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
நடிகை பூமி பெட்னேகருக்கு கரோனா! - பாலிவுட் பிரபலங்களுக்கு கரோனா
மும்பை: பாலிவுட் நடிகை பூமி பெட்னேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகை பூமி பெட்னேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் கூறியதாவது, "இன்று எனக்கு லேசான அறிகுறிகளுடன் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடைய மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன். என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாக தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழலை எளிதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். மகிவும் எச்சரிக்கையுடன் இருந்தும் எனக்கு தொற்று ஏற்பட்டு விட்டது. தயவு செய்து முகக்கவசம் அணியுங்கள். கைகளை அவ்வப்போது கழுவுங்கள். தகுந்த இடைவெளியை கடைப்பிடியுங்கள்" என பூமி பெட்னேகர் கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களாக பாலிவுட் பிரபலங்களான ஆமிர்கான், மாதவன், சஞ்சய் லீலா பன்சாலி, ஆலியா பட், அக்ஷய் குமார், விக்கி கௌசல், கோவிந்தா உள்ளிட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.