தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பூமி பெட்னேகரின் 'துர்காவதி' ட்ரெய்லர் வெளியீடு - அக்ஷய்குமாரின் தயாரிப்பு நிறுவனம்

மும்பை: பூமி பெட்னேகர் நடிப்பில் உருவாகியுள்ள 'துர்காவதி' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

Bhumi
Bhumi

By

Published : Nov 25, 2020, 6:45 PM IST

அனுஷ்கா நடிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'பாகமதி'. அரசியல்வாதியின் பின்னணியில் சிலைக்கடத்தல் நடக்கும் சம்பவத்தை திகில் கலந்த ஹாரர் ஜனரில் எடுக்கப்பட்டது. இதில் ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா ஷரத் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தை தற்போது பாலிவுட்டில் பூமி பெட்னேகரை நாயாகியாக வைத்து 'துர்காவதி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அஷோக் இயக்கியுள்ள இந்தப் படத்தை அக்ஷய் குமாரின் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை அக்ஷய் குமார் வெளியிட்டிருந்தார்.

தற்போது இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாலிவுட் ரசிகர்களுக்கு இந்தப் படம் திகிலுட்டினாலும் பாகமதி பார்த்தவர்கள் அனுஷ்கா அளவிற்கு கம்பீரமான நடிப்பு இல்லை என சமூக வலைதளத்தில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுவருகின்றனர். இந்தப் படத்தைப் படக்குழுவினர் டிசம்பர் 11ஆம் தேதி ஓடிடி தளமான அமோசன் ப்ரைமில் வெளியிட முடிவுசெய்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details