தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

திகில் கிளப்பும் பூட் பட ட்ரெய்லர்! - பூட்

விக்கி கவுஷல் ஹீரோவாக நடித்துள்ள பூட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

திகில் கிளப்பும் பூட் பட ட்ரெய்லர் வெளியீடு!
திகில் கிளப்பும் பூட் பட ட்ரெய்லர் வெளியீடு!

By

Published : Feb 3, 2020, 6:32 PM IST

பிரதாப் சிங் பானு இயக்கத்தில் விக்கி கவுஷல், பூமி பெட்னேகர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் பூட். இப்படத்தை தர்மா புரொடக்‌ஷன் சார்பில் கரண் ஜோகர், அபூர்வா மேத்தா , சஷாங்க் கைதன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. தகவல் சேகரிப்பாளராக நடிக்கும் விக்கி, மர்மம் நிறைந்த கப்பலுக்குள் ஒரே ஒரு விளக்கை மட்டும் எடுத்துக்கொண்டு செல்கிறார். அப்போது ஒரு சிறுமி, நான்கு பக்கமுள்ள சுவர்களிலும் ஓடுகிறார். இதைக் கண்டு சுதாரித்த விக்கி, சற்று பதற்றம் அடைவது போல் ட்ரெய்லரில் தெரிகிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

முதலில் இப்படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த மாதம் 21ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: என் வானத்துல வானவில்லும் கருப்புதானடா... அன்றும் இன்றும் என்றும் ஒரே STR

ABOUT THE AUTHOR

...view details