நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் பாலிவுட் திரைத்துறையையே உலுக்கியது. இதுகுறித்து திரைத்துறையினர் பலரின் மீது புகார் எழுப்பப்பட்டது. சுஷாந்த் தற்கொலை வழக்கு தொடர்பாக திரைத்துறையினர் பலரைக் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர். அந்த வகையில் பாலிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி விசாரணைக்காக பாந்திரா காவல் நிலையத்துக்குச் சென்றார்.
முன்னதாக, சுஷாந்தும் சஞ்சய் லீலா பன்சாலியும் ஒரு திரைப்படத்துக்காக இணைந்து பணியாற்றப்போவதாக இருந்தது. ஆனால் சுஷாந்த் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்ததால் பன்சாலியின் இயக்கத்தில் நடிக்க முடியாமல் போனது. சுஷாந்த் இறந்த பிறகு அவர் இறப்புக்கு பாலிவுட்டில் இருக்கும் நெப்போட்டிஸம்தான் காரணம் என்று ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டுவந்தது.