ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாகி 3. இப்படத்தில் டைகர் ஷெராஃப், ரோனி எனும் கதாபாத்திரத்திலும், ரித்தேஷ் தேஷ்முக், விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பாகி 3 வெளியாகும் தேதி அறிவிப்பு - ஷ்ரதா கபூர்
ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் பாகி 3 திரைப்படம் வரும் மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், சிறு வயதிலிருந்தே ரோனி, விக்ரம் ஆகியோர் இடையேயான பிணைப்பு பிரிக்கமுடியாதது. வெளிநாட்டு வேலைக்கு செல்லும் விக்ரம் அங்கு கடத்தப்படுகிறார். அவரைத் தேடி ரோனி வெளிநாடு செல்கிறார். அங்கு என்ன நடக்கிறது? யார் விக்ரமை கடத்தினார்கள்? என்பதே கதை. விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகள் நிறைந்த பாகி 3 படத்தில் ஷ்ரதா கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் ட்ரைலர், பாடல்கள், மேக்கிங் காட்சிகள் ஆகியவை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 6ஆம் தேதி படம் வெளியாகும் என்கின்றனர்.