தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ஆயுஷ்மான் குரானாவுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த குடும்பத்தினர்! - Shubh Mangal Zyada Saavdhan movie

ஆயுஷ்மான் குரானா குடும்பத்தினர் அவருக்குப் புதன்கிழமை சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளனர்.

ஆயுஷ்மான் குரானாவுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த குடும்பத்தினர்
ஆயுஷ்மான் குரானாவுக்கு சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்த குடும்பத்தினர்

By

Published : Mar 5, 2020, 11:18 AM IST

ஆயுஷ்மான் குரானா மற்றும் ஜிதேந்திர குமார் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் இந்தியில் வெளியான படம் ’Shubh Mangal Zyada Saavdhan’. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆயுஷ்மான்-ஜிதேந்திர இருவரும் தன்பால் ஈர்ப்பாளர்களாக மாறுகின்றனர். அதை அந்த குடும்பம் எப்படி பார்க்கிறது என்பதே படத்தின் கதையாகும். முதலில் இப்படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்தாலும், பின்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்படம் மாபெரும் வரவேற்பு பெற்றுவரும் நிலையில் அதைக் கொண்டாடும்விதமாக ஆயுஷ்மான் குரானாவின் குடும்பத்தினர் அவருக்குப் புதன்கிழமை சர்ப்ரைஸ் பார்ட்டி கொடுத்துள்னர். இது குறித்து அவர், "அது ஒரு அழகான சர்ப்ரைஸ். இந்தப் படத்தில் நடிக்க நான் முடிவு செய்தபோது, என்னுடய குடும்பத்தினர், நண்பர்கள் பக்கபலமாக நின்றனர்.

நான் எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்கும் என்று என் குடும்பதினர் நம்பினார்கள். அதுதான் இந்தப் படத்தில் நான் நடிக்க மிகவும் உத்வேகமாக இருந்தது’’ என்று கூறியுள்ளர்.

இதையும் படிங்க:வாரணாசியில் தொடங்கிய தனுஷின் 'அட்ராங்கி ரே' - லேட்டஸ்ட் அப்டேட்

ABOUT THE AUTHOR

...view details