இயக்குநர் அனுபூத்தி காஷ்யப் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகவுள்ள படம் 'டாக்டர் ஜி'. இந்த படத்திற்கு சுமித் சக்சேனா - விஷால் வாக், சவுரப் பாரத் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளனர்.
ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய படம் தொடக்கம்! - டாக்டர் ஜி
ஹைதராபாத்: ஆயுஷ்மான் குரானா - ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகவுள்ள 'டாக்டர் ஜி' படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
ஜுங்காலி பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தப் படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் முடிவடைந்தன. இந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கின. இது குறித்து ஆயுஷ்மான் குரானா - ரகுல் ப்ரீத் சிங் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
மருத்துவ கல்லூரியை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில், ஆயுஷ்மான் குரானா டாக்டர் உதய் குப்தா கதாபாத்திரத்திலும் சீனியர் மருத்துவ மாணவி டாக்டர் பாத்திமா கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளார். இயக்குநர் அனுராக் காஷ்யப் சகோதரி அனுபூத்தி காஷ்யப் இயக்குநராக இந்தப் படத்தில் அறிமுகமாகவுள்ளார்.