உலகை அச்சுறுத்தி வரும் COVID-19 இந்தியாவில் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் இந்த நோய்த்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இதிலிருந்து மக்களை காக்கும் விதமாக, அரசும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும், குறிப்பாக முகக்கவசம் அணிதல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவையும் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
தகுந்த இடைவெளி குறித்து ஷாருக்கானை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல்துறை
மும்பை: தகுந்த இடைவெளி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அசாம் காவல்துறையினர் ஷாருக்கானின் தனித்துவம் வாய்ந்த போசைப் பயன்படுத்தியுள்ளனர்.
தற்போது மக்களும் முகக்கவசங்கள் அணிந்தும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து புதிய இயல்புக்கு மாறி வருகின்றனர். இதற்கிடையில், அசாம் காவல்துறையினர் தகுந்த இடைவெளி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பாஸிகர் படத்தின் டயலாக்கையும், ஷாருக்கின் தனித்துவ போஸையும் பயன்படுத்தி உள்ளனர்.
அதில், தனது கைகளை அகலமாக விரித்து நிற்கும் ஷாருக்கானின் முகத்தில் முகக்கவசம் அணிந்து, ஆறு அடி அகலம் குறித்து ஷாருக்கானின் கைக்காட்டுவதாக காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
அதில், தகுந்த இடைவெளி மூலம் நாம் நம்மை சேர்ந்தவர்களைப் பாதுகாக்க முடியும். மேலும் இந்த ஆறு அடி இடைவெளியுடன் இப்போது நீங்கள் விலகி இருந்தால் பின்னால் உங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று பதிவிட்டுள்ளனர்.
இதற்கிடையில், அசாமில் பருவமழை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மாநிலத்தின் 33 மாவட்டங்களில் 28 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு, சுமார் 36 லட்சம் பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். கடந்த 2 ஆயிரத்து 678 கிராமங்களில், 1 லட்சத்து16 ஆயிரத்து404 ஹெக்டேர் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.