அஸ்ஸாம், பிகார் மாநிலங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் 'விருஷ்கா' - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விராட் கோலி
மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா அவரது கணவரும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான விராட் கோலியும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அஸ்ஸாம், பிகார் மாநிலங்களுக்கு நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.
பிகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநிலங்கள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
பிகாரில் ஏற்பட்ட வெள்ளத்தால் இதுவரை 38 லட்சத்து 47 ஆயிரத்து 531 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அஸ்ஸாமில் ஐந்து ஆயிரத்து 305 கிராமங்களிலிருந்து மொத்தம் 56 லட்சத்து 71 ஆயிரத்து 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
இதனையடுத்து நடிகை அனுஷ்கா சர்மா அவரது கணவர் கேப்டன் விராட் கோலியும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்த மாநிலங்களுக்கு நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.