ஹைதராபாத் : நடிகை அனுஷ்கா சர்மா, 3 வருட காத்திருப்புக்கு பின்னர் சக்தா எக்ஸ்பிரஸ் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் முன்பு தோன்றவுள்ளார். இந்தப் படம் ஒடிடி தளமான நெட்ஃபிக்ஸ்-இல் வெளியாகிறது.
சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் அனுஷ்கா சர்மா கிரிக்கெட் வீராங்கனை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சக்தா எக்ஸ்பிரஸ் படம் குறித்து நடிகை அனுஷ்கா சர்மா கூறுகையில், “இது மிகவும் சிறப்பு வாய்ந்த படம். ஏனெனில் இது ஒரு தியாகத்தின் கதை. இந்த சக்தா எக்ஸ்பிரஸ் கிரிக்கெட் பெண்கள் குறித்து பேசும்.
கடந்த காலங்களில் உலக அரங்கில் தனது நாட்டைப் பெருமைப்படுத்த வேண்டும் என்று பெண்கள் முடிவு செய்த நேரத்தில், அவர்களால் விளையாட்டை நினைத்துப் பார்ப்பது கூட மிகவும் கடினமாக இருந்தது” என்றார்.