இன்ஸ்டாகிராமில் அர்த்தமற்ற தவறான வார்த்தைகளைத் திரையில் காண்பித்து, அவை உணர்த்தும் சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கக் கோரும் கெஸ் த ஜிப்ரிஷ் (Gibberish - மழலையர் பேசும் அர்த்தமற்ற மொழியைக் குறிக்கும் சொல்) ஃபில்டர் தற்போது வைரலாகியுள்ளது. இந்த விளையாட்டில் சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க ஒரு பயனாளருக்கு 10 விநாடிகள் வரை நேரம் வழங்கப்படுகிறது.
கு க்றிஸ்டோஃபர் எனும் இன்ஸ்டாகிராம் பயனாளர் உருவாக்கியிருக்கும், இந்த ஃபில்டர், ஊரடங்கு காரணமாக பெரும்பான்மையானோரால் உபயோகிக்கப்பட்டு தற்போது வைரலாகியுள்ளது.