சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஜோடிகளின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஆகியோரின் பெயர் எப்போதும் முன்னிலையில் இருக்கும். இவர்கள் இருவரும் காதலித்துவந்த நிலையில் 2017ஆம் ஆண்டு இத்தாலியில் பிரமாண்டமாகத் திருமணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் நேரத்தில் தான் கருவுற்று இருப்பதாக அனுஷ்கா சர்மா புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதேபோல் விராட் கோலியும் ஜனவரி மாதம் தங்கள் வீட்டில் புதுவரவு இருக்கும் எனப் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து ஜனவரி மாதம் 11ஆம் தேதி அனுஷ்கா சர்மா பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இந்த மகிழ்ச்சிகரமான செய்தியினை விராட் கோலி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், "எங்களுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியினைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அனைவரது அன்பு, பிரார்த்தனைகள், வாழ்த்துகள் ஆகியவற்றுக்கு நன்றி.