Fortune India (ஃபார்ச்சூன் இந்தியா) இதழ் இந்தியாவின் சக்திவாய்ந்த 50 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை, தயாரிப்பாளர், தொழில் முனைவர் என பன்முகம் கொண்ட அனுஷ்கா ஷர்மா 39ஆவது இடத்தை பிடித்துள்ளார். வியாபார புத்திசாலித்தனம் மற்றும் கலாசாரத்தின் மூலம் தங்கள் தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்திய பெண்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
Fortune India: சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் அனுஷ்கா - அனுஷ்கா ஷர்மா
Fortune India வெளியிட்டுள்ள சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் அனுஷ்கா ஷர்மா இடம்பிடித்துள்ளார்.
Fortune India
நடிகை, தயாரிப்பாளராக மட்டுமில்லாமல், Nush எனும் ஆடை உலகை அனுஷ்கா நிர்வகித்து வருகிறார். மேலும், Myntra, Lavie, Nivea and Elle 18 உள்ளிட்ட பல ப்ராண்ட்களின் முகமாகவும் அவர் இருக்கிறார். அவர் தயாரித்த சிறிய பட்ஜெட் திரைப்படங்களான NH10, Phillauri, Pari ஆகியவை பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை எட்டியது. ஒரு தொழில் முனைவராக அனுஷ்கா ஷர்மா சிறந்த பெண்மணியாக திகழ்கிறார். எனவே அவரை Fortune India இதழ் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.