தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

விருதுகளை வாரிக்குவித்த ‘பாதல் லோக்’: மகிழ்ச்சியில் அனுஷ்கா - Filmfare OTT awards 2020

டெல்லி: அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் உருவான ‘பாதல் லோக்’ சீரிஸ், பிலிம்பேர் விருதுகளை வாரிக்குவித்துள்ளது. இதனால் அனுஷ்கா செம்ம குஷியாக இருக்கிறார்.

Patal lok'
Patal lok'

By

Published : Dec 20, 2020, 4:45 PM IST

அவினாஷ் அருண், ப்ரோசித் ராய் இணைந்து இயக்கிய வெப் சீரிஸ் ‘பாதல் லோக்’. ஜெய்தீப் அகல்வாத், குல் பனாங், நீரஜ் கபி, ஸ்வஷ்திகா முகர்ஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த சீரிஸ், ஓடிடியில் வெளியாகி சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதை அனுஷ்கா ஷர்மா தனது கிளீன் ஸ்லேட் பிலிம்ஸ் ப்ரொடக்‌ஷன் மூலம் தயாரித்திருந்தார்.

‘பாதல் லோக்’ சீரிஸ் பிலிம்பேர் விருதுகளை வாரிக்குவித்துள்ளது. இதன் விவரங்கள் பின்வருமாறு;

ஜெய்தீப் அகல்வாத் - சிறந்த கதாநாயகனுக்கான விருது

அவினாஷ் அருண், ப்ரோசித் ராய் - சிறந்த இயக்குநருக்கான விருது

சுதிப் ஷர்மா, ஹர்திக் மேத்தா, சாகர் ஹவேலி, குஞ்சித் சோப்ரா - சிறந்த கதாசிரியருக்கான விருது

சுதிப் ஷர்மா, ஹர்திக் மேத்தா, சாகர் ஹவேலி, குஞ்சித் சோப்ரா - சிறந்த திரைக்கதைக்கான விருது

பாதல் லோக் - சிறந்த சீரிஸுக்கான விருது என பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. இதை குறிப்பிட்டு தயாரிப்பாளர் அனுஷ்கா தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details