தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காமெடி மன்னன் சார்லி சாப்ளினை நினைவுகூர்ந்த அனுபம் கேர் - சார்லி சாப்ளின் காமெடி

வசனங்கள் இல்லாத ஊமைப்பட காலத்திலிருந்தே, சுமார் 75 ஆண்டுகாலம் வரை எல்லோரையும் சிரிக்கவைத்த சார்லி சாப்ளின் பற்றி நினைவுகூர்ந்துள்ளார் நடிகர் அனுபம் கேர்.

Anupam Kher reminds Charlie Chaplin
Bollywood actor Anupam kher

By

Published : Dec 26, 2019, 6:13 PM IST

மும்பை: சார்லி சாப்ளினின் சிறந்த காமெடி விடியோ ஒன்றை பகிர்ந்து அவரது மறைவுநாளை நினைவுகூர்ந்துள்ளார் பாலிவுட் நடிகர் அனுபம் கேர்.

பாலிவுட் மூத்த நடிகரான அனுபம் கேர் தனது ட்விட்டரில், இந்தப் பொல்லாத உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை. நமது பிரச்னைகளும்தான் - சார்லி சாப்ளின், ஜீனியஸ் மறைந்த இந்த நாளில் அவரை நினைவுகூர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இதனுடன் சார்லி சாப்ளினின் சிறந்த காமெடிகளுள் ஒன்றான சிட்டி லைட்ஸ் படத்தில் இடம்பெறும் பாக்ஸிங் பைட் காட்சியைப் பகிர்ந்துள்ளார்.

சார்லி சாப்ளின் நடித்த இந்தக் காட்சியை அடிப்படையாகக் கொண்டுதான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மான் கராத்தே படத்தின் பாக்ஸிங் காட்சி ஒன்று அமைந்திருந்ததாகக் கூறப்பட்டது.

வசனங்கள் இல்லாத ஊமைப்பட காலத்திலேயே தனது நகைச்சுவையால் சிறியவர், பெரியவர் என அனைத்து வயதினரையும் கட்டிப்போட்டவர் சாப்ளின். நடிப்பு, வித்தியாசமான செய்கை, முகபாவனை போன்றவற்றால் எல்லோரையும் சிரிக்கவைத்த இவர் 1977 டிசம்பர் 25ஆம் தேதி மறைந்தார். 1914ஆம் ஆண்டு தனது கலைப் பயணத்தை தொடங்கிய இவர் சுமார் 75 ஆண்டுகாலம் வரை கோலோச்சினார்.

உலகம் முழுவதும் கோலாகலமாக கிறஸ்துமஸ் விழா கொண்டாடப்படும் நாளில் அவரது இறப்பு நிகழ்ந்துள்ளது. இதனால் அவரது நினைவு பலரால் கவனிக்கப்படாமல் போனாலும், அழியாத தனது நகைச்சுவைகளால் பெருமையை நிலைநாட்டிவருகிறார்.

ABOUT THE AUTHOR

...view details