தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’மாணவர்களே போராடுவது உங்கள் உரிமை... ஆனால் அதே நேரம்?’ - நடிகர் அனுபம் கேர் - போராடுவது உங்கள் உரிமை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடுவது மாணவர்களின் உரிமை என்றாலும், நாட்டு நலனும் முக்கியம் என்று பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.

anupam-kher
anupam-kher

By

Published : Dec 21, 2019, 8:15 AM IST

நாடு முழுவதும் நடைபெறும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன.

மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டங்கள் பல இடங்களிலும் வன்முறையாக வெடித்து பொதுச் சொத்துக்கள் சூரையாடப்பட்டுவருகின்றன.

மேலும், போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்துவதால் உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வன்முறையாக மாறி வருவது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துவரும் நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கேர் அது குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில், ”இந்தியாவின் அனைத்து அற்புதமான மாணவர்களுக்கும் எனது ஒரே வேண்டுகோள். போராடுவது உங்கள் உரிமை. ஆனால் இந்தியாவைப் பாதுகாப்பது உங்கள் கடமை” என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க...

போலாந்தில் அமிதாப்புக்கு கிடைத்த கெளரவம்!

ABOUT THE AUTHOR

...view details