'ஜேம்ஸ் பாண்ட்' எனும் பிரபல பாலிவுட் திரைப்படம் பல்வேறு சீரிஸாக வெளியானது. இப்படம் ஒரு கற்பனை உளவாளியை மையமாக வைத்தே உருவாக்கப்பட்டிருக்கும். படத்தில் கற்பனை உளவாளியாக வருபவர்தான் ஜேம்ஸ் பாண்ட். இந்த ஜேம்ஸ் கதாபாத்திரம் புத்தகங்களாகவும் வெளியாகின. 1952ஆம் ஆண்டு அயன் பிளெமிங் என்பவரால் உருவாக்கப்பட்டவர்தான் ஜேம்ஸ் பாண்ட்.
'ஜேம்ஸ் பாண்ட்' கதாநாயகனுக்கு அறுவை சிகிச்சை! - அறுவை சிகிச்சை
'ஜேம்ஸ் பாண்ட்' எனும் பாலிவுட் படத்தின் கதாநாயகன் டேனியல் கிரேக்கிற்கு படப்பிடிப்பின் போது காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது.
இது திரைப்படமாக 1962ஆம் ஆண்டு ஷான் கானரி நடிப்பில் 'டாக்டர் நோ' எனும் பெயரால் தொடங்கியது. அதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு வரை டேனியல் கிரேக் நடிப்பில் 'ஸ்பெக்டர்' வரை திரைப்படமாக வெளியானது. தற்போது ஜேம்ஸ் பாண்டின் 25வது சீரிஸாக உருவாக்கப்பட்டிருக்கும் 'பாண்ட் 25' படத்தில் டேனியல் கிரேக் கதாநாயகனாக நடிக்கிறார். தொடர்ந்து, ஐந்தாவது முறையாக ஜேம்ஸ் பாண்ட் சீரிஸில் கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்நிலையில் 'பாண்ட் 25' படத்தின் படப்பிடிப்பு ஜமாய்கா நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்படப்பிடிப்பின் போது டேனியல் கிரேக்கிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் டேனியல் இரண்டு வாரம் படப்பிடிப்பில் கலந்துக் கொள்ள இயலாது என்று படக்குழு அறிவித்துள்ளது. 'பாண்ட் 25' திரைப்படம் திட்டமிட்டப்படி 2020ஆம் ஆண்டு ஏப்ரலில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.