தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகர்: சிவக்குமாரை மிஞ்சிய சல்மான் கான் - ரசிகரின் மொபலை பறித்து சென்ற சல்மான் கான்

விமான நிலையத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்ஃபோனை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தட்டி பறித்த சம்பவம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

Salman Khan
Salman Khan

By

Published : Jan 28, 2020, 7:40 PM IST

Updated : Jan 28, 2020, 7:55 PM IST

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'தபாங் 3'. இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனையடுத்து சல்மான் கான் 'ராதே: யுவார் மோஸ்ட் வாண்டட் பாய் ' என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சல்மான் கானுடன் திஷா பதானி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். இப்படத்தை தொடர்ந்து பிரபுதேவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளார்.

இந்நிலையில், படப்பிடிப்பிற்காக சல்மான் கான் பானாஜி விமான நிலையம் வந்தார். அப்போது விமான நிலைய ஊழியர் ஒருவர் சல்மான் கானுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.

இதனால் பொறுமையிழந்த சல்மான் கான் கோபத்துடன் அவரிடம் இருந்து செல்ஃபோனை பறித்துவிட்டு சென்றார். இதுகுறித்து அந்த நபர் விமான நிலைய காவல் துறையினரிடம் புகார் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த வீடியோ வைரலானதையடுத்து காவல் துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று தமிழ்நாட்டில் நடிகர் சிவக்குமாருடன் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்ஃபோனை அவர் தட்டிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க: ஆமிர்கானுக்காக விட்டுக்கொடுத்த பக்‌ஷி ராஜன்

Last Updated : Jan 28, 2020, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details