தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பிரபு'வா... 'பிரபுதேவா'வா... ஐயோ பாவம் அமிதாப்பச்சனே  கன்ப்யூஸ் ஆகிட்டாரு! - அமிதாப்பச்சன்

பிரபு என்று பெயர் குறிப்பிடுவதற்கு பதிலாக பிரபுதேவா என்று தவறுதலாக குறிப்பிட்டு நடிகர் அமிதாப்பச்சன் சிக்கலில் சிக்கியுள்ளார்.

பிரபு'வா... பிரபுதேவா' வா.. : ஐயோ பாவம் அமிதாப்பச்சனே  கன்ப்யூஸ் ஆகிட்டாரு!
பிரபு'வா... பிரபுதேவா' வா.. : ஐயோ பாவம் அமிதாப்பச்சனே  கன்ப்யூஸ் ஆகிட்டாரு!

By

Published : Jan 24, 2020, 1:31 PM IST

பொதுவாக ஒரு தமிழ் விளம்பரத்தில் கோலிவுட் அல்லது பாலிவுட் நட்சத்திரங்களில் யாராவது ஒருவர் தான் நடிப்பார்கள். ஆனால் குறிப்பிட்ட ஒரு பிரபல நகைக்கடை விளம்பரத்தில் மட்டும் கோலிவுட், டோலிவுட், பாலிவுட், கன்னடா என்று நான்கு மொழி படத்தைச் சேர்ந்த பிரபலங்களும் நடித்துள்ளனர்.

அவர்கள் வேற யாருமில்லை அமிதாப்பச்சன், பிரபு, நாகார்ஜூனா, சிவராஜ் குமார் ஆகியோர்தான். இந்த நிலையில் நேற்று இரவு அமிதாப்பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவுசெய்தார். அதில், 'ஜெயாவுக்கும், எனக்கும் இது வரலாற்றுத் தருணம். இந்திய திரைப்படத் துறையின் மூன்று லெஜண்ட்ஸின் மூன்று சூப்பர் ஸ்டார், மகன்களுடன் பணியாற்றினோம்' என்று அவர்களின் பெயரை கீழே பதிவுசெய்தார்.

ஐயோ பாவம் அமிதாப்பச்சனே கன்ப்யூஸ் ஆகிட்டாரு

அதில், நாகார்ஜுன் மகன் -அக்கினேனி, நாகேஸ்வர ராவ் (தெலுங்கு) சிவ்ராஜ் குமார் மகன் -டாக்டர் ராஜ் குமார் (கன்னடம்), சிவாஜி கணேசன் மகன் - பிரபு தேவா

இதில் கடைசியாக சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு என்று பெயர் குறிப்பிடுவதற்கு மாறாக 'பிரபு தேவா' என்று குறிப்பிட்டுவிட்டார். அவர் பதிவிட்ட சில மணி நேரத்திற்குள் அந்த ட்வீட் வைரலாகப் பரவியது. இதை அறிந்த பிறகு அமிதாப்பச்சன், உடனே அந்தப் பதிவை நீக்கிவிட்டு புதிதாக 'பிரபு' என்று ட்வீட் செய்துள்ளர்.

ஒரு மாபெரும் நடிகராக இருந்துகொண்டு அமிதாப்பச்சன் இதுபோன்று பெயரில் தவறு செய்ததை நெட்டிசன்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க: வங்க மொழி பேசி அசத்திய ஜான்வி கபூர்!

ABOUT THE AUTHOR

...view details