மும்பை: இயற்கை அன்னையை பாதுகாக்க அனைவரும் விழப்புணர்வை ஏற்படுத்த உறுதுமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அமிதாப் பச்சன் தனது ட்விட்டரில், காலநிலை மாற்றத்துக்கான காரணம் நாம்தான். எனவே ஒவ்வொருவரும் இயற்கை அன்னையை பாதுகாக்க சுற்றுச்சூழலை தினத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று #OneWishForTheEarth ஹேஷ்டாக்குடன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உங்களது குடும்பத்தினர், சமூகத்தினர் மத்தியிலும் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், ஒவ்வொரு நிமிடமும் முக்கியமானதே என்று குறிப்பிட்டு #ClimateWarrior ஹேஷ்டாக்குடன் வலியுறுத்தியுள்ளார்.