'பாலிவுட் பிக் பி' அமிதாப் பச்சனும், அவரது மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனும் ஜூலை 11 ஆம் தேதி கரோனா தொற்று உறுதியாக இருப்பதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.
இதனை அடுத்து இவர்கள் இருவரும், நானாவதி மருத்துவமனையில் தனி வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராய்க்கும் அவரது மகள் ஆரத்யாவுக்கும் கரோனா தொற்று உறுதியானது.
கரோனா தொற்று சிகிச்சை: அமிதாப் - அபிஷேக் உடல்நிலை ஒத்துழைப்பு
மும்பை: கரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனையில் இருக்கும் அமிதாப் - அபிஷேக் ஆகியோரின் உடல்நிலை நன்றாக தேறி வருவதாகவும், சிகிச்சைக்கு இவர்களின் இருவரின் உடலும் நன்றாக ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனையிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதுமட்டுமல்லாது இருவரும் குறைந்தது இன்னும் ஏழு நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று இரவு ( ஜூலை 13) அமிதாபச்சன் தன்மீது அன்பு செலுத்திய ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில், உங்களது பிரார்த்தனைகள், நல்லாசிகள் என்னும் கன மழை பொழிவு காரணமாக எல்லா அணைகளையும் உடைத்து விட்டது. நான் ஏகப்பட்ட அன்பின் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளேன். என் தனிமை இருளை பிரகாசப்படுத்திய உங்களின் அன்பை என்னால் விளக்க முடியாது என்று பதிவிட்டிருந்தார்.
பச்சனின் குடும்பத்திற்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் பணியாற்றிய 26 பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் அவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.