நடிகர் அபிஷேக் பச்சன் வரும் பிப்ரவரி ஐந்தாம் தேதி தனது 44வது பிறந்தநாள் கொண்டாடவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த அபிஷேக் ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கடந்த 29ஆம் தேதி அபிஷேக் பச்சனின் சிறிய வயது புகைப்படத்தை பதிவிட்டு இன்றுதான் அவரின் பிறந்தநாள் என்று பதிவிட்டார்.
இன்குபேட்டரில் அபிஷேக் பச்சன்: 70 புகைப்படத்தை பகிர்ந்த அமிதாப்பச்சன்! - அமிதாப்பச்சன்
நடிகர் அபிஷேக் பச்சனின் சிறு வயது புகைப்படத்தை அமிதாப்பச்சன் பகிர்ந்துள்ளார்.
அப்புகைப்படத்தைக் கண்ட நடிகரும், அபிஷேக் பச்சனின் தந்தையுமான அமிதாப்பச்சன் 'எஸ்' என்று பதிவிட்டார். இதைக் கண்ட ரசிகர்கள், அடுத்த மாதம் தானே பிறந்தநாள் எதற்காக இன்றே கொண்டாடுகின்றனர் என்று தெரியாமல் குழம்புகின்றனர். பிறகுதான் தெரிந்தது கடந்த புதன்கிழமை அபிஷேக் பச்சனின் நட்சத்திர பிறந்தநாளென்று. உடனே ஜூனியர் பச்சனுக்கு அனைவரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அபிஷேக் பச்சன் தற்போது பாப் பிஸ்வாஸ் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்துவருகிறார். ஷாருக்கான் தயாரித்துவரும் இதில் அறிமுக இயக்குநர் தியா அன்னபூர்ணா கோஷ் இயக்கிவருகிறார்.
இதையும் படிங்க: ‘பிரியங்கா சோப்ராவின் உடலையா விமர்சித்தேன்?’ - ஆடை வடிவமைப்பாளர் சர்ச்சை பதிவு