பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், தனது குடும்பத்தினருடன் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டதாக தனது பிளாக்கில் தெரிவித்துள்ளார்.
அதில், "தடுப்பூசி போட்டாச்சு. அனைவரும் நலமுடன் இருக்கிறோம். நேற்று குடும்பத்தினருடன் கரோனா பரிசோதனை செய்துகொண்டோம். அனைவருக்கும் கரோனா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனவே, அபிஷேக் பச்சனைத் தவிர அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டோம்.
அவர் படப்பிடிப்பில் இருப்பதால், விரைவில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வார். கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டது குறித்து நிச்சயம் நீண்ட பிளாக் ஒன்றை எழுதுவேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்தாண்டு, அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், அவரது பேத்தி ஆராத்யா பச்சன் ஆகியோருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ரஜினிகாந்திற்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த சத்யராஜ்