அமித்தாப் பச்சன், ஆயுஷ்மான் குரானா இருவரும் இணைந்து நடித்துள்ள பாலிவுட் திரைப்படம் ’குலாபோ சிதாபோ’. இந்த திரைப்படத்தை ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் படம் வெளியாவதில் தாமதம் ஆனது.
இதையடுத்து வெளியிட முடியாமல் இருக்கும் திரைப்படங்கள், அமேசான் ப்ரைம் போன்ற ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிவருகின்றன. அந்த வகையில் ‘குலாபோ சிதாபோ’ திரைப்படமும் அமேசான் ப்ரைமில் ஜூன் 12 ஆம் தேதி வெளியானது.
'குலாபோ சிதாபோ' முகக்கவசம் அணிந்த பிக் பி - முக கவசம்
பாலிவுட்டின் பிக் பி என்றழைக்கப்படும் நடிகர் அமிதாப் பச்சன் 'குலாபோ சிதாபோ' போஸ்டர் அச்சிடப்பட்ட முகக்கவசம் அணிந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அமிதாப்
இதையும் படிங்க:அமிதாப் பச்சனின் குலாபோ சீதாபோ கதாபாத்திரம் உண்மையா?