மும்பை தாக்குதல் நடைபெற்று இன்றோடு 12ஆண்டுகள் ஆகிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அமேசான் நிறுவனம் தனது 'Mumbai Diaries 26/11' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது.
'Mumbai Diaries 26/11' - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! - மும்பை தாக்குதல்
மும்பை தாக்குதலின் 12ஆம் நினைவு ஆண்டான இன்று அமேசான் நிறுவனம் தனது 'Mumbai Diaries 26/11' நிகழ்ச்சியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.
!['Mumbai Diaries 26/11' - ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! Mumbai Diaries 26/11](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-9676417-714-9676417-1606398728033.jpg)
இதுகுறித்து அமேசான் இந்தியா ஒரிஜினல்ஸின் தலைவர் அபர்ணா புரோகித், ‘Mumbai Diaries 26/11’ மும்பை தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் மரியாதை செலுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. மும்பையின் ஆன்மாவுக்கு இந்நிகழ்ச்சியை சமர்ப்பிக்கிறோம் என தெரிவித்தார்.
நிக்கில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்நிகழ்ச்சியில் கொங்கனா சென் ஷர்மா, மொஹித் ரய்னா, டீனா தேசாய், ஷ்ரேயா தன்வந்திரி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எம்மே எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்நிகழ்ச்சி மார்ச் 2021 முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.