தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

வீட்டில் சும்மா இருந்த சோம்பறியாகத்தான் இருக்கும்: வீடியோ வெளியிட்ட கங்கனா - தலைவி பட அப்டேட்

'தலைவி' படத்துக்காக உடல் எடையை கூட்டியுள்ள கங்கனா தற்போது தேசிய ஊரடங்கால் வீட்டில் இருந்தபடியே 5 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.

Kangana
Kangana

By

Published : Apr 10, 2020, 3:55 PM IST

உலகப்பெருந்தொற்று நோயான கரோனா தொற்றால் தற்போது உலகம் முழுவதும் அச்சத்தில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ளது.

இதற்கிடையில், மணலியில் இருக்கும் கங்கனா ரனாவத் தேசிய ஊரடங்கால் வீட்டில் இருந்தபடியே தனது உடற்பயிற்சி பயிற்சியாளருடன் உடல் எடையை குறைக்கும் முயற்சியை மேற்க்கொண்டுவருகிறார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், "நண்பர்களே கங்கனாவின் உடற்பயிற்சி குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். சோம்பலை உங்களிடம் அண்டவிடாது. இந்த பயிற்சியின்போது கங்கனா 5 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். இன்னும் நிறைய பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'தலைவி'க்காக உடல் எடையை 20 கிலோ கூட்டிய கங்கனா

ABOUT THE AUTHOR

...view details