தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் 'பாலிவுட் பிக் பி' அமிதாப் பச்சன் சமூக வலைதளங்கள் மூலம் தினமும் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார். இந்த ஊரடங்கில் அமிதாப் பச்சன் சமூக வலைதளத்தில் மிக ஆக்டிவ்வாகவும் செயல்பட்டுவருகிறார்.
நான் இங்க வந்து 12 வருஷம் ஆச்சு... எமோஜி வெளியிட்ட 'பிக் பி' - அமிதாப் பச்சன்
ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக தன் கார்ட்டூன் எமோஜியை 'பாலிவுட் பிக் பி' அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
![நான் இங்க வந்து 12 வருஷம் ஆச்சு... எமோஜி வெளியிட்ட 'பிக் பி' Amitabh](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6825663-486-6825663-1587108951775.jpg)
இதனிடையே இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அமிதாப் பச்சன் பதிவிட்டுள்ளதாவது, "இன்றுடன் நான் வலைப்பதிவை (blog) தொடங்கி 12 வருடங்கள் ஆகின்றன. 2008ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி நான் முதன் முதலில் வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன். இன்றுடன் 4ஆயிரத்து 424 நாட்கள் ஆகின்றன. இந்த நாட்களில் என்னை பின் தொடர்ந்த அனைத்து ரசிகர்களுக்கும் நெட்டிசன்களுக்கும் எனது நன்றிகளும் அன்பும்" என ட்வீட் செய்துள்ளார். இதனுடன் கார்ட்டூன் எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இந்த எமோஜி தற்போது சமூக வலைதள வாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது.