பாலிவுட்டின் ஸ்மைலின் க்யூன் என அழைக்கப்படும் ஆலியா பட், தேசிய ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட செல்ஃபியை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த செல்ஃபிக்கு கலங்க் என தலைப்பிட்டுள்ளார்.
பாதி முக புன்னகை செல்ஃபி - ஆலியா வெளியிட்ட புகைப்படம் - ஆலியா பட்
பாலிவுட் நடிகை ஆலியா பட் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Alia Bhatt
ஆரஞ்சு நிற உடை அணிந்திருக்கும் ஆலியா, முகத்தின் ஒரு பகுதியை மறைத்து ஒரு பகுதியை புன்னகையுடன் காட்டியுள்ளார். இந்த புகைப்படமானது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
ஊரடங்கால் வீட்டில் சும்மா இருப்பது போர் அடித்தால், புத்தகம் படியுங்கள், குடும்பத்தினருடன் நேரம் செலவிடுங்கள், பிடித்தமானவற்றை செய்யுங்கள் உள்ளிட்ட அறிவுரைகளை ஆலியா வழங்கினார். தேசிய ஊரடங்கால் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் ரசிகர்களுடன் தொடர்பு கொண்டுவருகின்றனர்.