ஹைதராபாத்: ரசூல் பூக்குட்டியின் ‘பிஹர்வா’ படத்தை விட்டு ஆலியா பட் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசூல் பூக்குட்டி படத்தை விட்டு விலகிய ஆலியா பட்! - ரசூல் பூக்குட்டி
ஆலியா கையில் பல படங்கள் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தை இயக்கவில்லை என்ற காரணத்தால்தான் அவர் படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.
![ரசூல் பூக்குட்டி படத்தை விட்டு விலகிய ஆலியா பட்! Alia Bhatt turns down Resul Pookutty](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10114916-901-10114916-1609757619157.jpg)
கங்குபாய் கத்தியவாடி, RRR, அதன்பிறகு ரன்வீர் சிங் உடன் ஒரு படம் என வரிசையாக கையில் படங்களை வைத்திருக்கும் ஆலியா, ரசூல் பூக்குட்டியின் ‘பிஹர்வா’ எனும் படத்தில் நடிப்பதாக இருந்தது. இந்திய - சீனப் போரில் உயிரிழந்த ராணுவ வீரர் ஹர்பஜன் சிங் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகவுள்ளது. இதில் பர்த் சம்தான், ஆலியா பட் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சூழலில், ஆலியா பட் இதிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலியா கையில் பல படங்கள் இருப்பது இதற்கு ஒரு காரணமாக இருந்தாலும், ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தை இயக்கவில்லை என்ற காரணத்தால்தான் அவர் படத்தை விட்டு விலகியதாக கூறப்படுகிறது. ரசூல் பூக்குட்டி இதை தனது அசிஸ்டண்ட் ஒருவரை வைத்து இயக்க திட்டமிட்டிருக்கிறார்.