இந்தியாவில் உலகப்பெருந்தொற்றான கரோனா வைரஸூக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாலிவுட் நடிகை ஆலியா பட், மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் சாக்லேட், ஸ்வீட் பன், பழங்கள், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை அனுப்பியுள்ளார். அதில் 'தற்போது பொதுமக்களை கரோனாவில் இருந்து பாதுகாக்க நீங்கள் செய்து கொண்டிருக்கும் பணி மிகப்பெரியது. நீங்கள்தான் உண்மையான ஹீரோக்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.