தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

இன்ஸ்டாவில் 5 கோடி ஃபாலோயர்களை பெற்ற ஆலியா பட்! - alia bhaat instagram account

நடிகை ஆலியா பட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 5 கோடி ஃபாலோயர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

ஆலியா பட்
ஆலியா பட்

By

Published : Oct 26, 2020, 8:34 AM IST

நடிகை ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், ‘சடக் 2’. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியான சில மணி நேரத்திற்குள் அதிக டிஸ்-லைக்குகளை பெற்றது. தனது இயல்பான நடிப்பு மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாகியுள்ள இவர், தற்போது இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்துள்ளார். அதாவது இவர் இன்ஸ்டாகிராமில் 5 கோடி ஃபாலோயர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதற்கு நடிகை ஆலியா பட் நன்றி தெரிவித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இன்று வாழ்த்த வேண்டிய நாள்.. எனது குடும்பத்தினருக்கும், அன்பானவர்களுக்கும் நன்றி தெரிவிக்க வேண்டிய நாள். எனக்கு ஐந்து மில்லியன் மக்களின் அன்பு கிடைத்துள்ளது. நான் உங்கள் அனைவரையும் மிகவும் நேசிக்கிறேன்.

கடந்த சில மாதங்களாக நான் கற்றுக்கொண்டவற்றைப் பகிர்ந்து கொள்ள இந்தத் தருணத்தைப் பயன்படுத்துகிறேன். சமூக ஊடகங்கள் நம்மை மிகவும் நெருக்கமாக இணைக்கின்றன. அது நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:'தரமான சம்பவம்' - சூர்யாவின் 40ஆவது படத்தை இயக்குவது யார் தெரியுமா?

ABOUT THE AUTHOR

...view details