திரைப்பட உலகின் பிரபல விருதான ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாதமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் புதிய உறுப்பினர்களை தங்கள் அகாதமியில் சேர்க்கும். அந்த வகையில், சர்வதேச அளவில் கலைத்துறையில் சாதித்த பல்வேறு நபர்களுக்கு இந்த ஆண்டு, 819 கலைஞர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் நடிகை ஆலியா பட், நடிகர் ஹிருத்திக் ரோஷன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தனக்கு அழைப்பு விடுத்ததற்காக ஆஸ்கர் விருது அமைப்பினருக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா பட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "புதிய உறுப்பினராக எனக்கு அழைப்பு விடுத்த ஆஸ்கர் திரைப்பட கலை மற்றும் அறிவியல் அகாதமிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இதை கவுரவமாகவும், பெருமையாகவும் உணருகிறேன்.
இந்திய சினிமாவின் குரல், உலக அரங்கில் சரியான இடத்தைப் பிடித்துள்ளதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிலிருந்து அதிகமான நடிகர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அகாதமியால் அழைக்கப்படுவதால், இந்திய சினிமா உலகம் முழுவதும் உள்ள மக்களின் இல்லங்களிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
சினிமா என்பது தண்ணீரைப் போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கு நிறம், இனமோ, இடமும் எதுவும் கிடையாது. எல்லா இடங்களுக்கும் அது சுதந்திரமாகச் செல்லும். உறுதியில்லாத பிரிந்துகிடக்கும் இந்த உலகில், மக்களை ஒன்றுசேர்க்க உருவாக்கப்பட்ட சமூக வலைதளங்கள் அவர்களை பிரித்துக் கொண்டிருக்கிறது. திரைப்படங்களே நம்மை இணைக்கும் சக்தியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
திரைப்படங்களே நம்மை இணைக்கும் சக்தியாக உள்ளது - ஆலியா பட் - ஆஸ்கார் விருதின் புதிய உறுப்பினராக ஆலியா பட்
மும்பை: தனக்கு அழைப்பு விடுத்ததற்காக ஆஸ்கர் விருது அமைப்பினருக்கு ஆலியா பட் இன்ஸ்டாகிராம் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.
ஆலியா பட்
இதையும் படிங்க:கணவருடன் இணைந்து உடல் உறுப்பு தானம் செய்த ஜெனிலியா
Last Updated : Jul 4, 2020, 7:37 PM IST